Random image

பெட்ரோல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்

பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து கொண்டு செல்வது குறித்து  தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. .

சென்னை சைதாப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்புறம் வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்தார்.

தமிழிசையை நோக்கி அவர், பெட்ரோல் டீசல் விலை தினமும் உயருகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசை பதில் எதுவும் தராமல் சிரித்தார்.

ஆனால் அருகில் இருந்த பாஜகவினர், தமிழிசை இருக்கும் போதே, கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இதை தமிழிசை கண்டும் காணாததுமாய்  அங்கிருந்து கிளம்பினார்.

தமிழிசையிடம்  கேள்வி எழுப்பிய  ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.