தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்துகிறது பாஜக

 

கோவை:

ரும் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்தப்பவதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வரும் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பாஜக சார்பில் தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்த இருக்கிறோம். சிறுவாணி, ஆழியாறு, பில்லூர் அணைகளை தூர்வாற வலியுறுத்தி இந்த யாத்திரை நடைபெறுகிறது” என்று வானதி தெரிவித்தார்.

மேலும் அவர், “தமிழகத்தின்  நீராதராங்களை மேம்படுத்துவது பற்றி கருத்து கேட்டு அது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவோம்” என்றும் தெரிவித்தார்.