மோடிக்கு கருப்புகொடி: வைகோமீது செருப்பு வீசிய பாஜக இளம்பெண்…! திருப்பூரில் பரபரப்பு

 

திருப்பூர்:

பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க இன்று திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு மதிமுக உள்பட பல கட்சிகள் கருப்புக்கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோடிக்கு எதிரா கருப்புக்கொடி காட்டிய வைகோமீது,  பெண் ஒருவர் செருப்பை எடுத்துவிசினார். விசாரணையில் அவர் பாஜக ஆதரவாளர் என தெரிய வந்துள்ளது.

வைகோமீது செருப்பு வீசிய பாஜக சசிகலா

பிரதமர் இன்று திருப்பூர் வந்ததை தொடர்ந்து சமூக வலைதளமான டிவிட்டரில் கோபேக் மோடிஹயும், வெல்கம் மோடியும் டிரெண்டில் இருந்து வந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே பெரியார் சிலை, அண்ணா சிலை, குமரன் சிலைக்கு மாலை அணிவித்த  வைகோ கருப்புக் கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, காவிரி பிரச்சினை, கஜா புயல் பாதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதாகவும்,  தமிழகத்துக்கான தேவைகளை மோடி நிறைவேற்ற வில்லை என்று குற்றம் சாட்டினார்.

அப்போது சசிகலா என்ற இளம்பெண் வைகோ பேசிய கூட்டத்தையட்டி செருப்பை வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை மதிமுக தொண்டர்கள் சிலர் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து செருப்பு வீசிய பெண்ணை போலீசார் மீட்டு அழைத்துச் சென்றனர். விசாரணையில், செருப்பு வீசியவர் பெயர் சசிகலா என்பதும், பாஜக உறுப்பினர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர், பாஜகவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார்.

இதன் காரணமாக போலீஸாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.