டில்லி

ந்த மாதம் 14  ஆம் தேதி ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகள் குடியிருப்பில் தீ வைத்ததாக டிவிட்டரில் ஒப்புக் கொண்ட பாஜக இளைஞர் அணி தலைவர் பிறது அந்தப் பதிவை அழித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் ரகினே மாநிலத்தில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர்.  அங்கு ஏற்பட்ட மதக்  கலவரத்தினால் அவர்கள் மியான்மரை விட்டு வெளியேறி இந்தியா, வங்க தேசம் உட்பட பல மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர்.   தெற்கு டில்லியில் கலிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.   உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாததால் இவர்களை திருப்பி அனுப்ப இயலவில்லை.  இந்நிலையில் இந்த அகதிகள் குடியிருப்பில் கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதி இரவில் தீபிடித்துள்ளது.   இந்த தீயினால் இங்கு தங்கி இருந்த 200 பேர் தங்களது ஐநா அடையாள அட்டை உட்பட அனைத்தையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவர்  மனீஷ் சந்தேலா தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஆன் நாங்கள் தான் ரோஹிங்கிய தீவிரவாதிகள் குடியிருப்புக்கு தீ வைத்தோம்” என பதிந்துள்ளர்.   ஆனால்  அந்தப் பதிவை அவர் பிறகு நீக்கி உள்ளார்.

இது குறித்து இஸ்லாமியர் ஒருங்கிணைப்பு அமைப்பான அகில இந்திய முஸ்லிம் மஜ்லிம் ஈ முஷவராத் டில்லி காவல்துறை ஆணையருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளது.

அதில் “பாஜகவின் இளைஞர் அணியின் மனிஷ் சந்தேலா தனது டிவிட்டர் பக்கத்தில் தாம் ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பை தீ வைத்து எரித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.  அதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாருடன் மனிஷ் சந்தேலா பதிந்த டிவிட்ட்ர் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டையும் அந்த அமைப்பு இணைத்துள்ளது.    இது குறித்து டில்லி காவல்துறை ஆணையாளர் அமுல்யா பட்நாயக் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.