டெல்லி-

உத்தரகாண்டில் பாரதீய ஜனதா கட்சியும் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4–ந் தேதி தொடங்கி, கடந்த 8–ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.. 5 மாநிலங்களிலும் இன்று  காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.  உத்தர பிரதேசத்தில் 224 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

உத்தரகாண்டில் பாஜக 47 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதேபோல் பஞ்சாப்பில்  காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் எஸ்.ஏ.டி 15 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 இடங்களிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. வாவில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.