பசந்த் பாண்டா, சுரேஷ் பூஜாரி உள்பட பாஜக 2வது, 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

டில்லி:

நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பாஜக தலைமை நேற்று முன்தினம், தமிழக பாஜக வேட்பாளர்களை கொண்ட 184 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு  இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

2வது கட்டமாக வெளியிடப்பட்டு 36 வேட்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலில்,  மகாராஷ்ட்டிரா லோக்சபா தொகுதிகளுக்கு 6 வேட்பாளர்களும், ஒடிசா லோக்சபா தொகுதிகளுக்கு  5 வேட்பாளர் களும் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கான தலா ஒரு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பூரியில் போட்டியிடுகிறார். மேலும் பாஜகவின் ஒடிசா மாநில தலைவர் பசந்த் பாண்டா, மூத்த தலைவர் சுரேஷ் பூஜாரி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இன்று 4வது கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளது. இதில் ஆந்திர சட்டமன்ற வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.