அசாம் மாநிலம் கவுகாத்தி பல்கலைகழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது.

முதுநிலை பட்டதாரிகள் யூனியன் சங்கத்துக்கு 15 நிர்வாகிகளை தேர்வு செய்ய நடந்த தேர்தல், பொதுத்தேர்தல் போன்று நடந்தது.

தலைவர், பொதுச்செயலாலர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு அசாம் மாணவர் சங்கத்தினர் தேர்வு பெற்றனர். ஆறு இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் மாணவர் சங்கத்தினர், ஐந்து இடங்களில் வென்றனர். பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஒரு இடத்திலும் வெற்றி அடையவில்லை.

கடந்த தேர்தலில் வித்யார்த்தி பரிஷத், நான்கு இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

அசாமில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பு போட்டியிட்ட அனைத்து பதவிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது.

– பா. பாரதி