கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாஜக மாநாடு

போபால்

த்திய பிரதேசம் போபால் நகரில் நடைபெற்ற பாஜக மாநாடு உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் உள்ள பெல் ஜம்போரி மைதானத்தில் பாஜக மாநாடு ஒன்று நடைபெற்றது.   இந்த் மாநாட்டில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல தலைவர்களும் சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பாஜக தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டுக்காக 5 ஹெலிகாப்டர் இறங்கும் தளமான ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டிருந்தன. மைதானம் முழுவதும் 45 பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நிகழ்வுகள் ஒளிபரப்ப பட்டன.    இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் 26 ஹெக்டேரில் அமைக்கப் பட்டிருந்தது.  அத்துடன் 1580 கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மாநாட்டுக்கு ”கார்யகர்த்தா மகாகும்ப்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது.   பாஜக ஊடக பொறுப்பாளர் லோகேந்திர பராசார், “இந்த மாநாடு உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றுள்ளது.    உலகிலேயே அதிக தொண்டர்கள் கலந்துக் கொண்ட அரசியல் க்ட்சி மாநாடு என இந்த மாநாட்டை கின்னஸ் புத்தகத்தின் அமைப்பு சேர்த்துள்ளது.

இதற்காக இந்த புத்தகத்தில் இங்கிலாந்தை சேர்ந்த அமைப்பு 15 குழுக்களாக வந்து ஆய்வு நடத்தியது.   ஆய்வை ஒட்டி இந்த சான்றிதழை வழங்கி உள்ளது.   மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில பாஜக தலைவர் ராகேஷ் சிங் ஆகியோர் அந்த அமைப்பிடம் இருந்து இந்த சான்றிதழை பெற்றுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.