ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ. சார்பில் களமிறங்கும் பிரபலங்கள் யார்?

புபனேஷ்வர்: ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தில், மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாலிவுட் நட்சத்திரம் ஹேமா மாலினி மற்றும் ஒடிய சினிமா பிரபலங்கள் ஆகியோர் ஈடுபடவுள்ளனர்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் இணைந்து நடக்கும் ஒடிசா மாநிலத்தில், பிரச்சாரம் செய்யும் பாரதீய ஜனதா பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், பாரதீய ஜனதா முதன்மை முகங்களான நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி போன்றோருடன், பாலிவுட் பிரபலம் ஹேமா மாலினியும் இணைகிறார்.

மேலும், முன்னாள் பா.ஜ. முதல்வர்களான சிவராஜ் சிங் செளகான், ராமன் சிங், அர்ஜுன் முண்டா ஆகியோருடன் ஒடிசாவின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கிரிதர் கெமாங்கும் இணைகிறார்.

இதுதவிர, ஒடிய திரைப்பட நட்சத்திரங்களான மிஹிர் தாஸ், ஸ்ரீதம் தாஸ், மகேஸ்வத ராய், அணு செளத்திரி உள்ளிட்டோரும் இணைகின்றனர்.

இந்தப் பட்டியல், ஒடிசாவின் முதன்மை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி