ஆட்சியை கைப்பற்றும் பாஜக.வின் கனவு தகர்ந்துள்ளது….மாயாவதி

லக்னோ:

‘‘அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்துள்ள வீழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம என்னும் அக்கட்சியினரின் கனவை நிர்மூலமாக்கி உள்ளது. இதை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

மாநில கவர்னர்கள் கட்சியின் உத்தரவின்படி நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதை விட பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்.