கமதாபாத்

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகி உள்ளது

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9ஆம் தேதியன்று 89 தொதிகளுக்கும் டிசம்பர் 14ஆம் தேதி 93 தொகுதிகளுக்குமாக இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.  வாக்கு முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கலந்துக் கொண்டனர்.

தற்போது பா ஜ க தனது வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் 70 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.  குஜராத்தின் தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி ராஜ் கோட் மேற்கு தொகுதியில் களம் இறங்குகிறார்.   துணை முதல்வர் நிதின் பட்டேல் மேஹ்சானா தொகுதியிலும், குஜராத் மாநில பாஜக தலைவர் ஜீது வாகினி பாவ்நகர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து பா ஜ க வில் இணைந்துள்ள பலருக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.