காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவின் அரசியல் வரவைக்கண்டு அதிர்ந்து போய் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மற்றும் பிரியங்கா மீதும் அவதூறுகளையும், பொய்யான தகவல்களையும் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் பிரியங்கா மது அருந்திவிட்டு காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பிரியங்கா மீதான மதிப்பை குறைக்கும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது.

ஆனால், அது உண்மை இல்லை என்பது தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த பிபிசி  உண்மை என்ன என்பதை விளக்கி உள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில், பிரியங்கா காந்தி மது அருந்திய நிலையில் இருப்பதாக காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வந்தது. குறிப்பாக பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் சமூக வலைதளங்களிலும்,  ”ஆதித்ய நாத்துக்கே என் ஆதரவு’, ‘ராஜ்புத் சேனா’ மற்றும் ‘மோதி மிஷன் 2019’ ஆகிய சமுகவலைத்தள பக்கங்களில் இந்த காணொளி அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

சுமார் 10 வினாடிகளே ஓடும் அந்த வீடியோவில்,  ஊடகத்தினரை நோக்கி உரத்த குரலில்,  ”உங்களால் இப்போது இங்கிருந்து அமைதியாக கிளம்ப முடியுமா?” என்று  கேட்கும் அந்தக் காணொளி பல ஆயிரம் பேரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

ஆனால், அந்த வீடியோவில் அவர் பேசிய தகவலை மறைக்கும் வகையில், எடிட் செய்யப்பட்டு, தெளிவற்ற நிலையில் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் பிரியங்கா  மது அருந்தியதால் ஊடகத்தினருடன் கடுமையாக நடந்து கொண்ட தாகவும் விமர்சிக்கப்பட்டது.

இந்த வீடியோ உண்மை என்பது குறித்து ஆய்வு செய்த பிபிசி, இது போலியான வீடியோ என்று அறிவித்து உள்ளது.

இந்த வீடியோ,  2018 ஏப்ரல் 12-ஆம் தேதியன்று எடுக்கப்பட்டுள்ளதாகவும், கத்துவா மற்றும் உனாவ் பாலியல் சம்பங்களுக்கு எதிராக நடந்த எதிர்ப்பு பேரணியில் தனது சகோதரரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் பிரியங்கா தனது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகள் மிரயா ஆகியோருடன் கலந்து கொண்டார் என்று தெரிவித்து உள்ளது.

‘மோதி பாகாவ், தேஷ் பச்சாவ்’ என்று கோஷமிட்டபடி நடைபெற்ற அந்த பேரணியில்,  ராகுல் மற்றும் பிரியங்காவை சந்திக்க காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்வம் காட்டினர். அதனால் பிரியங்காவால் போராட்டத்தின் மையப்பகுதியான இந்தியா கேட்டை அடைய முடியவில்லை. இதனால் சற்று கோபமடைந்த பிரியங்கா கட்சி தொண்டர்கள் மற்றும் ஊடகத்தினரிடம் அமைதியாக போராட்ட களத்துக்கு செல்லுமாறு உரக்க கூறினார். பிரியங்கா மது அருந்தியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த வீடியோவையே பாஜக ஆதரவு அமைப்புகள், பிரியங்கா மது அருந்தி விட்டு, போராட்டக்காரார்கள் மற்றும் ஊடகத்தினரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக  பொய் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும், இதுதொடர்பான வீடியோவுடன், சில நாட்களுக்கு முன்பு, பிரியங்கா குறித்து சுப்பிரமணியசாமி கூறிய  கருத்தையும் இணைத்து பதிவிட்டு வருகின்றனர் என்றும்  தெளிவுபடுத்தி உள்ளது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது பழமொழி. அதுபோலவே பாஜகவின் புளுகு மூட்டைகளும் அம்பலமாகி, பாஜகமீதான மதிப்பை மேலும் குறைத்து வருகிறது.