பாஜகவின் தோல்வி ஜனநாயகத்துக்கு வெற்றி : மம்தா பானர்ஜி

கொல்கத்தா

டந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை மக்கள் தோற்கடித்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இன்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்குகள் எண்ணபட்டு முடிவு வெளியாகி வருகிறது. இதில் பாஜக பின்னடவை சந்தித்து வருகிறது. பல இடங்களில் காங்கிரஸ் ஏறுமுகமாக உள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் முறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்து அக்கட்சியை தோற்கடித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் இது வெற்றி. இதுவரை அநீதி அட்டூழியம் அரசு நிறுவனங்களை அழித்தல், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துதல், ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தலித், எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஓ.பி.சி சிறுபான்மையினர் என யாருக்கும் எந்தவிதமான நல்ல பணிகளையும் செய்யாமல் இருந்தவர்களுக்கு எதிரான வெற்றியாகும்.

இந்த தேர்தல் மக்களவை தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்க இந்த தேர்தலில் 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது மக்களவை தேர்தலில் ஜனநாயகம் மலரும் என்பதற்கான அறிகுறியாகும். ஆட்ட நாயகன் விருதை மக்கள் ஜனநாயக்கத்துக்கு அளித்துள்ள்னர். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என பதிந்துள்ளார்.