அகிலேஷ் யாதவை எதிர்க்கும் பாஜகவின் போஜ்புரி பாடக நடிகர்

--

சாம்கர், உ.பி

த்திரப்பிரதேச மாநிலம் அசாம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவை எதிர்த்து போஜ்புரி பாடக நடிகரான தினேஷ்லால் யாதவ் பாஜகவால் களம் இறக்கப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டி இடுகிறது.    இந்த கூட்டணியின் சார்பில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.  இந்த கூட்டணி சார்பில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அசாம்கர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.    த

ற்போது பாஜக கலையுலக பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்குகிறது.    ஏற்கனவே ஹேமமாலினி மதுரா தொகுதியி பாஜக சார்பில் போட்டியிட உள்ளார்.   அத்துடன் சமீபத்தில் கட்சியில் இணைந்த ஜெயப்ரதாவும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அகிலேஷ் யாதவுக்கு எதிராக போஜ்புரி மொழி பாடகரும் நடிகருமான தினேஷ்லால் யாதவ் என்பவர் போட்டியிடுகிறார்.   இவர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி வேட்பாளரக போட்டியிட்டவர்.  அத்துடன் இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்விலும் கலந்துக் கொண்டவர் ஆவார்.

இவர் ’நிராகுவா சதல் ரஹே’ என்னும் போஜ்புரி ஆல்பத்தின் மூலம் புகழ் பெற்றதால் நிராகுவா என அழைக்கப்படுகிறார்.    தினேஷ் லால் யாதவ் போலவே மற்றொரு போஜ்புரி நடிகரான ரவிகிஷன் பாஜக சார்பில் கோரக்பூர் அல்லது ஜவுன்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது