பாஜக தலைவர்கள் பேரம் பேசிய மற்றொரு ஆடியோ

பெங்களூரு

பாஜகவுக்கு வாக்களிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பி சி பாடில் உடன் பாஜக தேசிய தலைவர் ஸ்ரீராமுலுவும் முரளிதர் ராவும் பேரம் பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக காங்கிரஸ் எம் எல் ஏ பி சி பாடிலுடன் பாஜகவுக்கு வாக்களிப்பதற்காக எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாகி உள்ளது தெரிந்ததே.  அத்துடன்  பி சி பாட்டிலுடன் பாஜக தேசிய தலைவர் ஸ்ரீராமுலு, மற்றும் முரளிதர் ராவ் ஆகியோர் பேரம் பேசிய விவகாரங்களும் வெளியாகி தற்போது டிவிட்டரில் பரவி வருகிறது.

அந்த பதிவில்

ஸ்ரீராமுலு : வணக்கம் நான் ஸ்ரீராமுலு பேசுகிறேன்

பாடில் : வணக்கம்

ஸ்ரீ : நீங்கள் எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறீர்கள்?

பா : ஐயா எதுவும் சொல்ல வில்லையா?

ஸ்ரீ : உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும்?

பா :நீங்கள் தான் அதை தெரிவிக்க வேண்டும்

இதன் தொடர்ச்சியாக அவர்கள் மேலும் பேசியதில்

ஸ்ரீ: நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.  தேர்தல் நிச்சயம் வராது.  நாங்கள் சபாநாயகரை தேர்ந்தெடுத்து  பெரும்பான்மையை காட்டி விடுவோம்.  ஆந்திரா, தெலுங்கானாவில் நடந்ததைப் போலவே எந்த ஒரு தகுதி இழப்பும் இருக்காது.  அதனால் நீங்கள் தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம்.  நான் முரளிதர் ராவ் இடம் தொலைபேசியை கொடுக்கிறேன்.  அவரிடம் பேசுங்கள்

முரளி” நீங்கள் ராஜினாமா செய்ய தேவை இருக்காது.   இன்னொரு தேர்தல் நடைபெறாது.

பா : என்னுடன் 3-4 பேர் உள்ளனர்.  நீங்கள் தொகை எவ்வளவு என்பதை சரியாக சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமுலு உடனே உரையாடலை இடைமறிக்கிறார்.

ஸ்ரீ : நான் ஏற்கனவே உங்களிடம் 15 என சொல்லி விட்டேன்.  நீங்கள் அவரிடம் மீண்டும் எவ்வளவு என கேட்க வேண்டாம்.

என குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் மூலம் பாஜகவின் தேசிய தலைவர்களான  ஸ்ரீராமுலு, முரளிதர் ராவ் ஆகியோரும் பணம் குறித்து பேரம் பேசியது தெரிய வந்துள்ளது.