கர்நாடகாவில் பாஜ தனித்து ஆட்சி அமைக்கும்: சதானந்த கவுடா

சதானந்த கவுடா (பாஜ)

பெங்களூரு:

ர்நாடக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நொடிக்கு நொடி  நிலவரம் மாறி மாறி வருகிறது. காலை 10 மணி வரை இரு தேசிய கட்சிகளும் சம அளவிலான இடங்களில் முன்னிலை வகித்து வந்தன.

இந்நிலையில் காலை  10 மணி நிலவரப்படி, பாஜ 109  இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், மஜத 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

நேரம் ஆக ஆக பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சதானந்தகவுடா, கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைவது உறுதி என்று கூறினார். நாங்கள் 112 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறோம் என்றும், இதன் காரணமாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் கூறி உள்ளார்.

செய்தியாளர்களின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, அதற்கான கேள்வியே எழவில்லை என்று கூறி உள்ளார்.

கர்நாடகாவில் தனித்து  ஆட்சி அமைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே  போதுமானது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP, There is no question of alliance (with JDS) as we are already crossing 112 seats: Sadananda Gowda, கர்நாடகாவில் பாஜ தனித்து ஆட்சி அமைக்கும்: சதானந்த கவுடா
-=-