Random image

மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் உ.பி. மாநில கூட்டணி கட்சிகள்!

லக்னோ:

.பி மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தள் மற்றும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிகள் மோடியின் நிகழ்ச்சிகளை புறப்கணிக்க முடிவு செய்துள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததால் மக்கள் கொந்தளிப்பான மன நிலையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக  பாஜக கூட்டணி கட்சிகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில் உ.பி. மாநிலத்தில் யோகி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய உதவியாக இருந்து வந்த அப்னா தள் கட்சி மற்றும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஜேபி தலைவர்களின் திமிர்பிடித்த அணுகுமுறையால் தாங்கள் பாஜகவின் நிகழ்ச்சிகளையும், மோடியின் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மாநிலத்தில் பாஜகவின் அணுகுமுறை மக்களிடையே பெரும் காயத்தை ஏற்படுத்தி இருப்பதாக வும், சிறுபான்மையினர் மீது பாஜகவினரின் தாக்குதல்கள் மற்றும் பலவீனமான சமுதாயத் தினரை அவமதிக்கும் பாஜகவின் செயல் கண்டனத்துக்குரியது என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாஜகவின் கூட்டணி கட்சிகளான இவை 2014 ஆம் ஆண்டு மக்களவை மற்றும் 2017 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டன. தற்போது யோகியின் நடவடிக்கை காரணமாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மோடியின் தலையீடு தேவை என்று படேல் தெரிவித்தார்.

இந்த நிலையில் மோடியின் வாரணாசி மற்றும்  காஜபூரில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் கூட்டணி கட்சிகள் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.