அங்கே ராமர் கோயில், இங்கே சபரிமலை: பா.ஜ.க. மீது திருமாவளவன்  தாக்கு

பாஜக வாக்குகளைப் பெற வட இந்தியாவில் ராமர் கோயில் பிரச்சினையையும், தென் இந்தியாவில் சபரிமலை பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.  .

கர்நாடக மாநிலம் மேகதாதுவில்  அணை கட்ட மத்திய அரசு ஆய்வு நடத்த அளித்திருப்பதைக் கண்டித்து திமுக தலைமையில் தோழமைக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதல் கலந்துகொண்டு திருமாவளவன் பேசியதாவது:

”கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட அதிமுகவின் போதுமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.  காவிரி விவகாரத்தில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை மீறி அறிவிப்பு செய்திருக்கிறது.  இந்த அறிவிப்பு திடீர் என வந்திருப்பதை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்.

கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் தான் பாஜக மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அரசியல் ரீதியாக மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று திருமாவளவன் பேசினார்.

மேலும் அவர் பேசயபோது, “பாஜக வட இந்தியாவில் இந்துக்களின் வாக்குகளைப் பெற ராமர் கோயில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.  அதே போல தென் இந்தியாவில் சபரிமலை விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக அணியைப் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்  எடுத்து வருகின்றன.  பலமாக உள்ள திமுக அணியைப் பிளவுபடுத்தி திமுகவைத் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள்” என்று திருமாவளவன் பேசினார்.

#BJP #votetactics #RamaTemple #North India #Sabarimala #SouthIndia  #Thirumavalavan

.

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP's vote tactics; Rama Temple in North India, Sabarimala in South India: Thirumavalavan's Accusation, அங்கே ராமர் கோயில், இங்கே சபரிமலை: பா.ஜ.க. மீது திருமாவளவன்  தாக்கு
-=-