மகளிர் ஒதுக்கீட்டு ஆதரவு டிவீட்டை நீக்கிய பாஜக இளைஞர் வேட்பாளர்

பெங்களூரு

பாஜகவின் மிகவும் இளைஞரான வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மகளிர் ஒதுக்கீடு குறித்த 2014 ஆம் ஆண்டு டிவிட்டை நீக்கி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 28 வயதான வழக்கறிஞர் தேஜஸ்வி சூர்யா தெற்கு பெங்களூரு தொகுதி வேட்பாளர் ஆவார். பாஜக வேட்பாளர்களில் மிகவும் இளைஞரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பாராள்மன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் அளிப்பதை குறித்து தனது டிவிட்ட்ரில் பதிவிட்டிருந்தார்.

இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பல வருடங்களாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு கட்சி பேதமின்றி அனைத்து ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிக்காததால் இன்னும் மசோதாவாகவே உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக் ஆட்சி அமைத்ததும் இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதை ஒட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தேஜஸ்வி சூர்யா, “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது மோடி அரசு அதை மாற்றி அமைக்கும். பல நாட்கள் கனவாக இருந்த மகளிர் இட ஒதுக்கீடு இனி உண்மை ஆகும்” என டிவிட்டரில் பதிந்தார்.

தற்போது பாஜக இளைஞர் அணி பொறுப்பில் உள்ள இவர் தெற்கு பெங்களூரு தொகுதியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனது இளம் வயதிலேயே புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கும் இவர் தனது 2014 ஆம் வருட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நீக்கி உள்ளார். இது நெட்டிசன்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.