ஜாகர்த்தா

ந்தோனேசியாவில் 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவிஜயா ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனம் இந்தோனேசியாவில் உள்நாட்டுச் சேவை மற்றும் சர்வதேச சேவைகளை அளித்து வருகிறது.   இந்நிறுவனத்தின் போயிங் 737 விமானம் நேற்று மதியம் ஜாகர்த்தாவில் இருந்து மேற்கு காலிமாண்டன் மாநிலத்தில் உள்ள போண்டியானக் இன்னும் இடத்துக்கு கிளம்பியது.  அந்த இடத்தை அடைய விமானத்துக்கு 90 நிமிடங்கள் ஆகும்.

ஆயினும் விமானம் கிளம்பிய 44 நிமிடங்களில் விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  விமானத்தினுள் அப்போது 56 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர்.  காணாமல் போன இந்த விமானத்தைத் தேடும் பணியில் உடனடியாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.   இந்நிலையில் ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மற்றும் மனித உடல்கள் மீனவர்களிடம் கிடைத்ததால் விமான விபத்துக்குள்ளாகியது உறுதியானது.,

இதையொட்டி அந்த கடல் பகுதியில் விமானிகளின் உரையாடலைச் சேமித்து வைக்கும் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.  தற்போது விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளும் கடலினுள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அந்த கருப்புப் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.