கருப்பு பணம்: நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்க பிரிவு வேட்டை!

டில்லி,

ருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிரடிவேட்டையில் ஈடுபட்டு உள்ளது. தமிழகத்திலும் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கையில்  மத்திய அமலாக்கப் பிரிவு ஈடுபட்டு வருகிறது.
கடந்த 8ந்தேதி இவு,  கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக  அறிவித்தது.

இதனையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் வரிசையான நின்று மாற்றினர். பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. அதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் இப்போது வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக பதுக்கல்காரர்கள் கமிஷன் அடிப்படையில் மாற்றும் சம்பவம்  நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் கமிஷன் தொழில் செய்தவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருப்பு பணத்தை வேட்டையாட  புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் உள்ளிட்ட இடங்களிலும், தங்கநகை கடை களிலும் சோதனை நடத்தப்பட்டது.  மத்திய அரசின் வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

மேலும் மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் முழுமையாக வங்கிகளுக்கு வரவில்லை என கூறப்படு கிறது.  இதையடுத்து,  கருப்பு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து, வரி, அபராதம் செலுத்தும் திட்டங்களை அது அறிவித்துள்ளது.

இருந்தாலும் பணம் டெபாசிட் செய்வதற்கு வங்கிகளுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

black-money_pti_3803

இதையடுத்து,  பதுக்கல் கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாணய மாற்று மையங்கள், ஹவாலா டீலர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் அதிரடி சோதனை நடத்த மத்திய அமலாக்கப் பிரிவு முடிவு எடுத்தது.

அதன்படி நாடு முழுவதும் கொல்கத்தா, புவனேஷ்வர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் 40 இடங்களில் மத்திய அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனை நடத்தியது.

கொல்கத்தாவில் ஒரு டாக்டரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதே பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் சிக்கி உள்ளது.

தமிழ்நாடு

மேலும், சென்னையில் அமலாக்கப்பிரிவினர் 5 இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர். தனியார் நிறுவனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சோதனையில் ரூ. 1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வெளிநாட்டு பணம் ரூ. 34 லட்சம் மதிப்பளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சோதனை நடைபெற்ற இடங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டது.