வெளிநாட்டில் சொத்துக்குவிப்பு: ப.சி. குடும்பத்தினர் மீதான வழக்கு அக்டோபர் 10ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை:

வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வருமான வரித்துறையினர்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை  அக்.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் குடும்பத்தினர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல  வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அதுகுறித்து வருவமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள்  மீது வருமான வரித்துறை கருப்பு பண சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போழ   ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆஜராகி இருந்தனர். அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை  அக்.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி