கருப்பு பண முதலை சேகர் ரெட்டி கைது! சிபிஐ அதிரடி

சென்னை,

மிழக முக்கிய மணல் குவாரி காண்டிராக்டரும், திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினருமான சேகர் ரெட்டி சிபிஐ போலீசாரால் இன்று  கைது செய்யப்பட்டார்.

பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி, அவரது தம்பி  மற்றும் அவரது உறவினர் வீடுகள் மற்றும் குவாரிகளில் வருமான வரித்துறையினர்  கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.131 கோடி பணம் மற்றும் 170 கிலோ தங்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் வருமான வரித்துறையினர், அமலாக்கப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மூலம், இன்று தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி  சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.