பதுக்கல் பணத்தை கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு கொடுத்த சினிமா பிரபலம்?

ரவுண்ட்ஸ்பாய்:

aa

500,1000 ரூபா நோட்டுகள், செல்லாதுன்னு அறிவிச்சத்துக்கப்புறம், “குப்பைத்தொட்டியில் ஒரு மூட்டை நோட்டுக்கட்டு!, “ பார்க்கில் வீசி எறியப்பட்ட நூறு கோடி” அப்படின்னு எல்லாம் நியூஸ் வருது.

வீசி எறியப்பட்ட பணக்கட்டுகளை எடுக்க அடிச்சுகிட்ட மக்கள்னும் நியூஸ் வருது.

இது மாதிரி சமயத்துல வழிபாட்டுத்தலங்கள்ல போயி காசை.. ஸாரி, பணக்கட்டுகளை கொட்டுற கருப்பு ஆடுகள்தான் அதிகம்.

இந்த நிலையில, ஒரு வாட்ஸ் அப் குரல் வைரலாகி வருது:

“கருப்பு பணம் அதிகமா வச்சிருக்கிறவங்க, வழிபாட்டுத்தலங்கள்ல போயி கொட்டாதீங்க. ஏழைப்பட்டங்களுக்கு கொடுங்க”  – இதான் அந்த வாட்ஸ்அப் குரல் சொல்லும், இன்றைய செய்தி.

அப்படி யாருக்கும் மனசு வருமா என்பது சந்தேகம்தான்.

திருவாசகத்தை சிம்பொனியா இசையமைச்ச்சாரே இளையராஜா.. நினைவிருக்கா.

அந்த நிகழ்ச்சியில, “என்கிட்ட பணம் இல்லே. அதனாலதான் இன்னொருத்தர் இதை செய்ய வேண்டியிருக்கு. இல்லேன்னா நானே வெளியிட்டிருப்பேன்” அப்படின்னு உருக்கமா பேசினார்.

அடுத்த வாரமே, தன்னோட மகள் திருமணத்தை முன்னிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அறுபலட்ச ரூபாய்க்கு கிரீடம் வாங்கிக் கொடுத்தார்னு செய்தி வந்துச்சு.

4 அவரு நகை செய்யக் கொடுத்தது கருப்பு பணமோ வெள்ளைப்பணமோ.. ஆனா அந்த அளவுக்கு வசதி இருந்தும்  திருவாசக சிம்பொனிக்கு செலவு பண்ண தயாரா இல்ல. அதான் மேட்டர்.

பெரும்பாலானவங்க இப்படித்தான்.

இன்னைக்கு சினிமா நண்பர் ஒருத்தர சந்திச்சப்ப, இது பத்தியும் பேச்சு வந்தது.

அவர் சொன்ன விசயம் ஆச்சரியமா இருந்தது.

“எல்லாருக்கும் தெரிஞ்ச சினிமா பிரபலம் அவர். தமிழ் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். அவர் படம் ரிலீஸ் என்றால்,  உயிருக்குத் துணிஞ்சி டிக்கெட் எடுக்க போட்டி போடுவாங்க.  அதே நேரம் அவருக்கு கருமி, சுயநலவாதின்னு  பட்டம் கொடுக்கறவங்களும் உண்டு.

ஆனா வெளியில தெரியாம பலருக்கு உதவி செய்யற குணம் அவருக்கு உண்டு. இதனால அவருக்கும் அவர் மனைவிக்கும் மனஸ்தாபம் ஏற்படறதும் உண்டு.

பொதுவா அவரு ரொக்க பணமா வச்சிருக்க மாட்டார். அண்ரடை மாநிலங்களிலும்.. ஏன், உலகம் முழுதும் பல இடங்கள பாதுகாப்பா  சொத்து சேர்த்து வச்சிருக்கார்.

ஆனா, பெரிய சொத்து ஒன்னு வாங்கறதுக்காக, பெரும் தொகையை ரொக்க பணமா மாத்தி வச்சிருந்தார். அதுல பெரும்பாலும் கருப்புதான்.

திடீர்னு, 500, 1000 நோட்டு செல்லாதுன்னு அறிவிப்பு வந்தவுடனே அவரும், மனவி, வாரிசுகளும் பதறிப்போயிட்டாங்க.

அப்புறம் நிதானமா யோசிச்ச அவர், “நமக்காக உண்மையா விசுவாசமா உழைக்கிற நம்ம வேலை ஆட்களுக்கு பிரிச்சிக் கொடுத்திடலாம்”னு சொல்லியிருக்கார்.

வழக்கம்போல குடும்பம் ஒத்துக்கலை. குறிப்பா, மனைவி. பெரும்பாலும் இந்த மாதிரி நேரத்துல, பிரச்சினை வேணாம்னு மனைவி சொல்லே மந்திரம்னு முடிவு பண்ணுவார்.

ஆனா, இந்த முறை அப்படி இல்ல. தான் நினைச்சதையே செஞ்சிட்டார். தன்னோட ஆடிட்டரை கூப்பிட்டு ஐடியா கேட்டிருக்கார். அதன்படி,  தன்னிடம் வேலை பார்க்கறவங்களை தேர்ந்தெடுத்து, பணத்தை கட்டுக்கட்டா பிரிச்சி கொடுத்திட்டார்.  அவரவர் எக்ஸ்பீரியன்ஸுக்கு ஏத்த மாதிரி தொகை. அதை எப்படி பேங்கல மாத்தறதுன்னும் ஆடிட்டர் மூலமா ஐடியா கொடுத்து அனுப்பிட்டார்.

ஊழியருங்க எல்லாம் ஆனந்த அதிர்ச்சியில மிதக்கறாங்க!” என்றார் அந்த சினிமா நண்பர்.

பரவாயில்லை… சில நல்லது நடந்திருக்கு!