கருப்பு பண வெளியேற்றம் தான் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம்,,,,,சுப்ரமணியன் சுவாமி

பனாஜி:

கோவாவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில்,‘‘, கருப்புப் பணம் நாட்டை விட்டு ஒழிவதால் தான் ரூபாயின் மதிப்பு சரிகிறது.

முன்னேறிய நாடாக அமெரிக்கா இருக்கும் வரை அமெரிக்கா டாலரின் மதிப்பு சக்தி வாய்ந்ததாக, உயர்வடைந்து கொண்டு தான் இருக்கும். நாட்டில் இருந்து கருப்புப்பணமாக இந்திய ரூபாய் வெளியே சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு சரிகின்றது.

இந்தியாவில் இருக்கும் பணத்தின் பெரும்தொகை கருப்புப் பணமாக உள்ளது. இந்த பணம் தற்போது நாட்டில் இருந்து வெளியே செல்கிறது. டாலருக்கு நிகராக மாற்றப்படும் ரூபாயின் மதிப்பு சரிவடையத்தான் செய்யும்.

மிக வளர்ந்த நாடு என்ற நிலையை அமெரிக்கா இழக்க நேரும் போது மற்ற நாடுகளின் பண மதிப்பு கூடும். அதுவரை சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதை தடுக்க இயலாது’’என்றார்.

கார்ட்டூன் கேலரி