ஜோத்பூர்: 

மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சல்மான்கான் ஜோத்பூர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றத்தில் சல்மான்கான் தரப்பில் பெயில் பெட்டிசன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜோத்பூர் சிறை  டிஐஜி, விக்ரம் சிங்கிடம், செய்தியாளர்கள்,சல்மான்கான் அடைக்கப்பட்டுள்ள  சிறை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ஜெயிலில் கழிவறை, குளியளரை சுத்தமாக இருக்கும் என்றும்,  சல்மானுக்கானுக்காக எந்தவித சிறப்பு வசதியும் செய்யப்படாது என்று தெரிவித்தார்.

 

998 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி  பட சூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்றபோது, அந்த படத்தில் நடித்த கதாநாயகன் சல்மான்கான், , சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்  ’ அங்குள்ள காட்டில் வேட்டைக்குச் சென்றனர். இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வனத்துறை தொடர்ந்த  வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் வனத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணைமுடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, மான் வேட்டையாடி வழக்கில் சல்மான்கான் சல்மான்கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர்  குற்றவாளி என நீதிபதி தேவ்குமார் காத்ரி  தீர்ப்பு கூறினார்.

பின்னர், இந்த குற்றத்திற்காக அவருக்கு  5 ஆண்டு சிறை  தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும்  விதித்து தீர்ப்பு கூறினார். மேரும், இந்த வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி ஆகியோர் விடுவிக்கப்படுவாகவும் அறிவித்தார்.