நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதிபர் டிரம்புக்கு சொந்தமான டவரின் 50வது மாடியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கிய இந்த டவரில் ஒரு வீட்டில் இருந்த டோட் பிராஸ்னர் என்ற 67 வயது முதியவர் விபத்தில் சிக்கினார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இவர் 1996ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கி வசித்து வந்தார். இவர் ஒரு ஓவிய டீலர்.

தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக கடுமையாக போராடி தீணை அணைத்தனர். தீ சரியாக எந்த இடத்தில் பிடித்தது என்பதை கண்டறிய முடியவில்லை. ஆனால் அடுக்குமாடி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 வீரர்கள் காயமடைந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு 1983ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. தீயை அணைத்து பெரும் உதவி செய்த வீரர், வீராங்கணைகளுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

664 அடி உயரம் கொண்ட இந்த டவரின் 58வது மாடியின் டிரம்பின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டபோது இவர்கள் யாரும் வீட்டில் இல்லை. 26வது மாடியில் டிரம்ப் நிறுவனங்களின் தலைமையகம் உள்ளது. 200 தீயணைப்பு வீரர்கள். அவசர கால மருத்துவ குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.