பாலியல்  சீண்டல் செய்த காமுகனை தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்த பார்வையற்ற சிறுமி! 

பார்வையில்லாத சிறுமி தன்னை  பாலியல் சீண்டல் செய்த காமுகனின் கைகளை முறுக்கி காவல்துறையிடம்  ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

மும்பையில், பார்வைத் திறன் அற்ற சிறுமி தன் தந்தையுடன் திங்கள்கிழமை தாதரிலிருந்து கல்யாண் என்ற இடத்துக்கு தன் தந்தையுடன் ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில்  சென்றுகொண்டிருந்தாள். அப்போது அச்சிறுமியின் அருகே நின்றிருந்த விஷால் சிங் என்கிறவன் அச்சிறுமியை தகாத முறையில் தொட்டுள்ளான். அதைக் கண்டு பயப்படாத அச்சிறுமியை, அவனின் கைகளை முறுக்கி உள்ளாள். எதிர்பாராத தாக்குதலைக் கண்ட அவன் கோபத்தில் கத்தியுள்ளான். உடனே அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வந்துள்ளனர். மேலும் அச்சிறுமி தன் தந்தையிடம் அவன் தன்னை தகாத முறையில்  தொட்டான் எனக் கூறியுள்ளாள்.

காமுகன் விஷால் சிங்

ஆனால், அடுத்த ரயில்நிலையம் வரும்வரை அவனது கைகளை முறுக்கியபடியே  வந்து அவனை ரயில்வே காவல்துறையிடம் அவளும் அவளது தந்தையும் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய போலீசார், ‘’அச்சிறுமி பயப்படாமல் அவனை தாக்கி எங்களிடம் ஒப்படைத்தாள். காரணம் அவள் கராத்தே கற்றுள்ளாள். அவள் பிடித்த பிடிக்கு அவனது விரல்கள் உடைந்திருக்கக்கூடும்’’ எனக் கூறினார்.

இதுகுறித்துக் கூறிய அச்சிறுமி, ‘’எங்களைப் போன்றவர்கள் தான் பாலியல் சீண்டலுக்கு ஆளாவோம். ஆகையால் அதிலிருந்து தப்பிக்க எங்கள் பள்ளியில்எங்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி அளித்தனர். அதுதான் இப்போது உதவியது’’ எனக் கூறினாபுள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திபுள்யுள்ளது.