கொல்கத்தா:

நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் ராமநவமி விழா பல இடங்களில் கலவரங்களுடன் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது இந்த கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுபோல ஜோத்பூரில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தின்போது, அப்பாவி இஸ்லாமிய முதியவர் முகமது அஃப்ராசுல் என்பவர்  கொடூரமாக கொலை செய்த நிகழ்ச்சி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கண் தெரியா இஸ்லாமிய தம்பதியினரை இந்துத்துவாவை சேர்ந்த சிலர், காவிக்கொடியை அவர்கள் கையில் கொடுத்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த. வீடியோவில் கண் தெரியா தம்பதியினர் ஒழுங்காக நடக்க இயலாத நிலையில் தள்ளி சென்று கொண்டிருகும்போது, அவர்களிடம் இந்துத்துவாக குண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி மிரட்டுகின்றனர்.

அப்போது ஒருவர்,  “நீ என்னை பார்க்க முடியாது. அதுபோல ஸ்ரீராமையும் நீ பார்க்க வேண்டாம். ஆனால் உன் வாயால் ஜெய் ஸ்ரீராம், ஜெய் மாதா தாரா என  சொல் என்று கூறி அவரிடம் காவிக்கொடியை அளிக்கும் காட்சி பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக உயிருக்கு பயந்த கண்தெரியாத தம்பதிகள் காவிக்கொடியை கையில் பிடித்தபடி ஜெய்ஸ்ரீராம் சொல்லிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு செல்கின்றனர்.

அந்த வீடியோ….