உலககோப்பை வென்ற பிளைன்ட் கிரிக்கெட் அணியினர் மோடியுடன் சந்திப்பு!

டில்லி,

பார்வையற்றோருக்கான உலக கோப்பையை இரண்டாவது முறை வென்ற இந்திய அணியினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த 12ந்தேதி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்திருந்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.4 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 9 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை படைத்தது இந்திய அணி.

முன்னதாக புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற டி20 பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது தடவையாக உலக கோப்பையை பெற்றுள்ளது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற இந்திய அணியினர் இன்று பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Blind T20 World Cup winning cricket team meeting with Modi!, உலககோப்பை வென்ற பிளைன்ட் கிரிக்கெட் அணியினர் மோடியுடன் சந்திப்பு!
-=-