லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றி இருக்கிறார்.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக ப்ளூப்பர்ஸ் சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பு தளம், தளத்தில் நடைபெற்ற சுவாரசியங்கள், நடிகர்களின் கிண்டல்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை ப்ளூப்பர்ஸ் பாணியில் படத்தின் இறுதியில் இணைக்கவுள்ளார்கள்.