சென்னை,

லகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

தற்கொலையை தூண்டும் விளையாட்டான,  புளுவேல் விளையாட்டு ஆன் லைனில் பகிரப்படு வதை தடுக்க வேண்டும் என்று  மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும்,  ரஷிய  தூதரகத்து டன் தொடர்பு  கொண்டு, இந்த விளையாட்டை தடை செய்யவேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.

புளுவேல் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த விளையாட்டு காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புளுவேல் மரணம் குறித்து,  சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை கடந்த 1ந்தேதி  தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த விளையாட்டு குறித்து ரஷிய தூதரகத்துடன் பேசி உடனே தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.