கல்கத்தா,

யிர்கொல்லி விளையாட்டாக புளுவேல் ஆன் லைன் விளையாட்டின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கல்கத்தாவில் புளுவேல் டாஸ்க் காரணமாக தலைகீழாக தொங்கி செல்பி எடுத்து அனுப்ப வைக்கும்படி மிரட்டப்பட்ட கல்லூரி மாணவன் ஆசிரியர் முயற்சியால் மீட்கப்பட்டார்.

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த தற்கொலை உயிர்க்கொல்லி விளை யாட்டை தடை செய்ய இந்தியாவில் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் புளுவேல் விளையாட்டு குறித்து மத்திய , மாநில அரசுகள் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் கல்லூரி மாணவர் ஒருவர் விளையாட்டின் 12வது நிலையில், தலைகீழாக தொங்கியபடி செல்பி எடுத்து அனுப்பியுள்ளார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன் ஒருவர் இந்த விளையாட்டில் சிக்கி உள்ளது ஆசிரியர்களுக்கு தெரிய வந்தது.

சில நாட்களாக படிப்பில் ஆர்வம் காட்டாமல், தனிமையை விரும்பிய மாணவனை கண்காணித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனிடம் நடத்திய விசாரணையில், அவர்,  தான்  புளுவேல் விளை யாட்டில்  சிக்கி உள்ளதாகவும், அதிலிருந்து வெளியேற முடியவில்லை என்று ஆசிரியரிடம் கதறி அழுதுள்ளார்.

மேலும், தனக்கு கடந்த மாதம் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக ஒரு மெசேஜ் வந்ததாகவும், அதன்படி தனது விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து தனக்கு வந்த டாஸ்க் படி, புளுவேல் விளையாட்டை விளையாடி வருவதாக வும், சவால்களை  நிறைவேற்றி வருவதாகவும் கூறிய அவர், இதுவரை 12 டாஸ்க் நிறைவேற்றி உள்ளதாகவும்,  13வது சவாலாக மரத்தில் தலைகீழாக தொங்கியபடி செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என தனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான் அதை மறுத்ததற்கு, தனது பெற்றோரை கொன்றுவிடுவதாக தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக மனமுடைந்த மாணவன் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில், அவரை கவனித்து வந்த ஆசிரியர் அவனிடம் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்த ஆசிரியர், போலீசார் துணையோடு அந்த மாணவருக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல்  மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத்தில் ராணுவப் பள்ளியில் படித்து வந்த 2 மாணவிகளும்ன மீட்கப்பட்டுள்ளனர். செல்போன் மூலம் புளுவேல்  விளையாடிய இரண்டு மாணவிகளும் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டு,  ஹோசங்காபாத் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்ய  நின்றுக் கொண்டிருந்த போது  அவர்களை  கண்காணித்த போலீசார் அதிரடியாக அவர்களை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த மாணவிகளுக்கு மன நல சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.