புளுவேல்: மதுரை மாணவர் தற்கொலை குறித்து தனிப்படை விசாரணை! எஸ்.பி.

மதுரை,

ஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது.

உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளை அடிமைப்படுத்தியுள்ள புளுவேல் ஆன்லைன் கேமால் இதுவரை சுமார் 3000க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த விளையாட்டு காரணமாக பலியான உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த விளையாட்டு தடை விதிக்க கோரி நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.  இந்தியா விலும் புளுவேல் விளையாட்டுக்கு தடைவிதிக்க கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரையில் கல்லூரி மாணவன் விக்னேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், புளூ வேல் விளையாட்டு மிகவும் விபரீதமானது என்று மதுரை ஆட்சியர் கூறியுள்ளார்.

மதுரை மாணவர் தற்கொலை குறித்த வழக்கு  கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

போலீசார்  விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது.

மேலும், விக்னேஷ் தற்கொலை குறித்து விசாரிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, விசாரணை யில் விக்னேஷ் 50 நாட்களுக்கு மேலாக புளுவேல் விளையாடி வந்தது தெரியவந்துள்ளது

புளூவேல் விளையாட்டு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் செல்போனில் விளையாடும் விளை யாட்டுக்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும்  மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.