படிக்கட்டுக்கு கீழே கழிவறை கட்டியுள்ளார்… கங்கனா ரனாத்துக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுத்த பிரபல நடிகை கங்கனா ரனாத்,  பங்களாவில்  மும்பை மாநகராட்சி  நோட்டீஸ் ஒட்டியுள்ளது. காரணம் என்ன தெரியுமா?
மாடிப்படிகட்டுக்கு கீழே அனுமதியின்றி கழிவறை (கக்கூஸ்) கட்டியுளாராம். மாநில அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். பாலிவுட் நடிகர்களிடையே போதை பழக்கம் மற்றும் சுஷாத் போன்றவர்கள் தற்கொலை  போன்றவற்றை  சுட்டிக்காட்டி அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து,  சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர்  நடைபெற்று வருகிறது. கங்கனா ரனாத் மும்பை வந்து மன்னிப்பு கோர வேண்டும் என சிவசேனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால், தான் கண்டிப்பாக வருவேன், மன்னிப்பு கேட்க முடியாது என்று கங்கனா கொக்கரித்தார். அவருக்கு மத்திய அரசு,   கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது.
இதனால், செய்வதறியாது திகைத்துள்ள சிவசேனா அரசு, மும்பை பாந்திராவில் உள்ள கங்கனா வின் அலுவலகம் மீது கண் வைத்துள்ளது,. கங்கனாவுக்கு தொல்லைக் கொடுக்கும் நோக்கில், பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றுள்ளனர்.
அந்த நோட்டீசில்,  கங்கணா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி  குறிப்பிட்டு உள்ளது.  மேலும் மாநகராட்சியின் நோட்டீசுக்கு நடிகை கங்கனா ரணாத் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும்  கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
கங்கனா ரணாவத் பங்களா இடிக்க சிவசேனா அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா அரசின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.  அரசியல்வாதிகளையும், ஆளும் கட்சிகளையும் பகைத்துக்கொண்டால், இதுபோன்ற நடவடிக்கைகள் பாயும் என்பதில் மட்டும் அனைத்து மாநில அரசுகளும் கைகோர்த்து செயல்படுவதும் இந்தியாவின் சாபக்கேடு போலும்….