ஆந்திராவில் 40 பேருடன் படகு ஆற்றில் மூழ்கியது
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மும்மடிவரம் ஆற்றில் 40-க்கும் மேற்பட்டோருடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த படகு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்திற் ஆற்றுக்குள் படகு முற்றிலும் மூழ்கியது.
படகில் 10 குழந்தைகள் உள்பட 40 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் நீரில் தத்தளித்த 10 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.