அக்னி தேவி படத்திற்கு தடை விதிக்க கோரி பாபி சிம்ஹா புகார்…!

இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்த அக்னி தேவி திரைப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கக்கோரியும், இயக்குனர் மீதும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாபி சிம்ஹா .

2018ம் ஆண்டு அக்னிதேவ் என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். சொன்ன கதை வேறு. எடுத்துக்கொண்டிருக்கும் கதை வேறு என படப்பிடிப்பின் 5 நாளே தெரிந்து கொண்டேன்.அதோடு படத்தில் இருந்தும் விலகிவிட்டேன்.

அக்னிதேவ் என்ற படத்தின் டைட்டிலை அக்னி தேவி என்று படக்குழுவினர் மாற்றிவிட்டனர். படமும், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நான் நடிக்கவே இல்லை. எனக்குப் பதிலாக டூப் மற்றும் கிராபிக்ஸ் செய்துள்ளனர். அப்படியிருந்த போது, நான் நடித்துள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இயக்குனர் ஜான்பால் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பாபி சிம்ஹா புகார் கூறியுள்ளார்

இதன்படி ஜான்பால் ராஜ் மீது 406, 420, 469, 470 (ஆள் மாற்றம், மோசடி, ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.