கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் பாபி சிம்ஹா….!

‘புத்தம் புதுக் காலை’ ஆந்தாலஜியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மிராக்கிள்’ குறும்படத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹா அதனைத் தொடர்ந்து கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது,பிரபல இயக்குநர் ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கவுள்ள ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை ராஜேஷ்வர் எழுதியுள்ளார்.

முழுக்க கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கவுள்ளது.