பிரபாகரன் வேடத்தில் பாபிசிம்ஹா:  ‘சீறும் புலி’  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை கூறும் மையமாக கொண்டு,  சீறும் புலி படத்தின்   ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

சீறும் புலிஎன்று தலைப்பிலான இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது.  நீலம், உனக்குள் நான், லைட் மேன்  ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார்.  பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்கிறார்.

1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்த பிரபாகரனின், 64வது பிறந்தநாளான இன்று சீறும்புலி  படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரில் பிரபாகரனைப் போல் ராணுவ உடையில் பாபி சிம்ஹா ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் புலி ஒன்று இருக்கிறது. புலியின் தலையில் அவர் கையை வைத்திருக்கிறார்.

சீறும் புலி என்ற தலைப்பிற்கு மேலே மக்கள் தலைவனின் எழுச்சி  என்ற வாசகமும், தலைப்பிற்கு கீழே வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்ற வாசகமும் உள்ளது.  இந்தப் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரமும் போஸ்டரில் இடம்பெறவில்லை.