கமல் – ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பு சென்ற 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது .ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.