பாபி சிம்ஹாவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது…!

எஸ்.ஆர்.டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் பாபி சிம்ஹா, ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தை ரமணன் புருஷோத்தமன் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.

ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சுனில் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். நந்தினி என்.கே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.