கைகள் கட்டப்பட்ட நிலையில் 2 இளம்பெண்கள் சடலம் மீட்பு: இமாச்சலில் பரபரப்பு

சிம்லா:

மாச்சல பிரதேச மாநிலத்தில் 2 இளம்பெண்களின்  கைகள் கட்டப்பட்ட நிலையில், அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்ரா மாவட்டம் பதேபூர் பகுதியில் இரண்டு பெண்களின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அந்த இளம்பெண்களின் சடங்களை மீட்டனர். அப்போது அந்த  2 பெண்களின் கைகள்  ஒருவருக்கொருவர் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதன் காரமணாக அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மர்ம நபர்கள்  கைகளை கட்டி பாலியல் பலாத் ரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி  சந்தோஷ், இறந்த பெண்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அவர்கள் யார் என்பது தெரிய வில்லை. அவர்கள் குறித்து அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கைப்பற்றப்பட் 2 பெண்களின் உடல்களும் சுமார் 25 முதல் 30 வயது உள்ளவர்களாக தெரிகிறது என்றும், உடற்கூறு பரிசோதனை முடிவு கிடைத்த பிறகுதான் , அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது தெரியவரும் என்று கூறினார்.

தெரிவித்துள்ளார்.