சென்னை:

மும்பையை சேர்ந்த 2 வயது குழந்தையின் உடல்தானத்தால் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 2வயது குழந்தையின் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை சென்னை அடையாறில் உள்ள போர்டிஸ்  மலர் மருத்துவமனை செய்துள்ளது.

மும்பையை சேர்ந்த தம்பதியினரின் 2வது குழந்தை மூளைச்சாவு அடைந்ததால், அந்த குழந்தையை உடல்தானம்  செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்று மலர் மருத்துவமனையில்  இருதய பிரச்சினை காரணமாக  உயிருக்கு போராடி வந்துள்ளது.  மும்பையை சேர்ந்த 2 வயது குழந்தையின் உடல்தானம் குறித்து அறிந்த மலர் மருத்துவமனையில், அந்த குழந்தையின் இதயம் கிடைத்ததால், இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தையின் உயிரை காப்பாற்றலாம் என எண்ணி அதற்கான முயற்சி மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, மும்பை குழந்தையின் இதயம் அகற்றப்பட்டு, உடடினயாப அதை விமானத்தின் மூலம் சென்னைக்கு வரவழைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். மும்பை குழந்தையின் உடல்பாகங்கள் மேலும் பலருக்கு பொருத்தப்பட்டதாகவும் மொத்தம் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் அந்த 2வயது குழந்தையால் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தையின் இருதய மாற்று அறுவை சிசிச்சை மேற்கொண்ட போர்டில் மலர் மருத்துவமனை  இதய அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர். பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர். சுரேஷ் ராவ் தலைமையிலான குழு வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதுகுறித்து கூறிய டாக்டர் பாலகிருஷ்ணன், 2வயது குழந்தையின் இதய மாற்று அறுவை சிகிச்சை மிகக் கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. இருந்தாலும், அதை வெற்றிகரமாக செய்துள்ளோம்… இது குழந்தைகளுக்கான இதயமாற்று அறுவை சிகிச்சையில் இது ஓர் மைல்கல் என  பெருமிதமோடு கூறினார்.