உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்! கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…

சென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர்  நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  இதையடுத்து, உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் என டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும்  60வயதுக்கு மேற்பட்டோருக்கும், பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு ஆளான 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்  கொரோனா தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் 1ந்தேதி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது.இதையொட்டி, பிரதமர் மோடி உள்படபல மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.

என தெரிவித்துள்ளார்.