’சீதிமார் ‘ என்ற தெலுங்கு படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார், தமன்னா. அவருக்கு ஜோடி, கோபிசந்த்.

’’இந்த கேரக்டருக்காக அசைவ உணவை தியாகம் செய்து, தீனியையும் குறைத்து ஒல்லி பிச்சான் போல் உடம்பை மாற்ற வேண்டும்’’ என்று இயக்குநர் சம்பத் நந்தி கூற – ஜிம்மே பழியாக கிடந்து உடம்பை மேலும் ஸ்லிமாக்கி உள்ளார், தமன்னா.

தொழில்முறை கபடி வீரர்களிடம் பயிற்சியும் பெற்றுள்ளார்.

படத்தில் தமன்னா, தெலுங்கானா கபடி குழுவுக்கு பயிற்சியாளராக நடிக்க-
ஹீரோ கோபிசந்த் எதிர் அணியான ஆந்திரா அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்த படத்துக்காக தெலுங்கானா பாஷையையும் கற்றுக்கொண்டாராம், தமன்னா.
’ நான் விளையாட்டை கதைக்களமாக கொண்ட படத்தில் நடிப்பது இதுவே முதன் முறை. இதற்கு முன் நான் கபடி விளையாடியதே கிடையாது. இப்போது கபடியின் நுணுக்கங்கள் எனக்கு அத்துபடி என்கிறார்’’ தமன்னா.