நியூயார்க்: இரண்டு மோசமான விபத்துக்களையடுத்து, தனது 737 மேக்ஸ் விமான உற்பத்தியை, 20% குறைக்கவுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், மாதம் 52 விமானங்கள் தயாரிப்பு என்ற இலக்கு, 42 என்பதாக குறைக்கப்படும். ஏப்ரல் மாத மத்தியிலிருந்து இது நடைமுறைக்கு வரும். ஆனால், இந்த அறிவிப்பு எதுவரை என்ற காலஅளவு அறிவிக்கப்படவில்லை.

குறுகிய உடலமைப்புக் கொண்ட போயிங் தயாரிப்பு விமானங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், சமீபத்திய விபத்துக்களால் அவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாடல் விமானங்கள், இன்னும் 2 மாதங்கள் வரை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோபியாவில் நடந்த விமான விபத்தில் 157 பயணிகளும், இந்தோனேஷியாவில் நடந்த விமான விபத்தில் 189 பயணிகளும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

– மதுரை மாயாண்டி