இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது: எத்தியோப்பிய போக்குவரத்துத் துறை தகவல்

அடி அபாபா:

இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடுகள் இருந்ததற்கான ஆதாரம் கருப்புப் பெட்டிகளை ஆய்வு செய்தபின் கிடைத்துள்ளது.


இது குறித்து எத்தியோப்பிய போக்குவரத்து அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் போயிங் விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
எத்தியோப்பியாவில் போயிங் விமானம் கடந்த 10-ம் தேதி விபத்துக்குள்ளானது.

இரு விபத்துகளிலும் கிடைத்த கருப்புப் பெட்டிகளை போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் ஆய்வு செய்தது.

இதில் பதிவான குரல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, விபத்துக்குள்ளான 2 போயிங் விமானங்களிலும் ஒரே மாதிரியான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது” என்றார்,