வாஷிங்டன்:

ரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானமான போயிங்  777எக்ஸ் விமானத்தின்  சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. இதன் காரணமாக விரைவில், இந்த விமானம் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’, உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் விமானத்தை இரட்டை எஞ்சின்களுடன் உருவாக்கி உள்ளது. இதற்கு  ‘போயிங் 777 எக்ஸ்’ என பெயரிடப்பட்ட உள்ளது.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டத்துக்கு  இரண்டு முறை நாட்கள் குறிக்கப்பட்டு, மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை  சோதனை ஓட்டம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் சியாட்டில் நகர் விமான நிலையத்தில் இருந்து   திட்டமிட்டபடி சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விமானம் , 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே 777 எக்ஸ் விமானத்துக்கு,  சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் ஆர்டர் செய்துள்ளதாகவும், இந்த விமானத்தில் 384 முதல் 426 பயணிகள் இதில் பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே போயிங் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, பல நாடுகள் போயிங் விமான சேவைகளை ரத்து செய்த நிலையில், தற்போது போயிங் 777எக்ஸ் என்ற விமானம் நவீன தொழில்நுட்பத்துட னும், பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டும் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.