வாஷிங்டன்:

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எத்தியோப்பியா போயிங் 737 விமான விபத்தில் 157 பேர் பலியானார்கள். அதுபோல இந்தோனேசியா விபத்திலும் பலர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கைத் தொடர்ந்து  உயிரிழந்த விமான பயணிகள் குடும்பத்திற்கு தலா $144,500 (1,44,500 United States Dollar equals 1,02,36,018.75 Indian Rupee) நஷ்டஈடு வழங்க போயிங் நிறுவனத்துக்கு உத்தர விடப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை மாதம் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்கு உள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 8 விமான பணியாளர்கள், 4 இந்தியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் பறக்க பல நாடுகள் தடை விதித்தன.

இந்த நிலையில், விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவிக்கப் பட்ட 50 மில்லியன் டாலர் நிதி உதவி நிதியிலிருந்து  737 மேக்ஸ் விபத்துக்களில் கொல்லப்பட்ட 346 பேரின் குடும்பங்களுக்கு போயிங் நிறுவனம்  தலா 144,500 டாலர் செலுத்தும் என்று நிதியத்தின் நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் வக்கீல்கள் கென் ஃபைன்பெர்க் மற்றும் காமில் எஸ் பிரோஸ் ஆகியோர் மேற்பார்வை யில் இந்த நிதி, பலியான குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும் எனறு கூறப்பட்டுள்ளது.