ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனின் வேலைக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியல் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதில், ஜார்ஜ் பிலிப்ஸ் மற்றும் நாவப்பன் ஆகிய இருவரும் தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் வரையில் ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரை அடுத்து, நாவப்பனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். நாவப்பன் மீது, 406 மற்றும் 420 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விசாரணையில் அரசுப் பணிக்கு பலரிடம் புரோக்கர்கள் மூலம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ், டிஎன்பிஎஸ்சி அரசு துணைச் செயலர் என்ற பெயரிலும், நாவப்பன் எரிசக்தி துறையில் அரசு துணை செயலர் என மற்றொரு பெயரிலும் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் பேடு தயாரித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
பல துறை அரசு அதிகாரிகளுக்கு நாவப்பன் கொடுத்த வேலைக்கான போலி நியமன கடிதங்களை உண்மையான கடிதம் போலவே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் இது போல் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.